
இலங்கையில் வரலாற்று சிறப்புடன், தேரோடும் ஈச்சரமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெயர்பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
உலகநாச்சி அம்மையாரால் பூஜிக்கப்பட்ட ஆலயமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகளில் பல இடங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
பூஜை வழிபாடுகளில் தீப ஆராதனை, அர்ச்சனை, தேவார பாராயணம் என்பன இடம்பெற்றதனை அடுத்து அடியார்கள் குருவிடம் ஆசி பெற்றனர்.
கலந்துகொண்ட பக்த அடியார்கள் நெய் விளக்கேற்றியும், கற்பூரச் சட்டி ஏந்தியும், வில்வ இலைகளால் சிவலிங்கப்பெருமானை பூஜித்தும் தங்களது நேர்த்திகளை நிறைவேற்றியதுடன்,
கண் விழித்து சிவபுராணத்தினை ஓதி, ஓம் நமசிவாய எனும் மந்திரத்திதை உச்சரித்து பக்திபூர்வமாக மகா சிவராத்திரி விரதத்தை அனுட்டித்தனர்.
மேலும், ஆலய முன்றலில் சிவராத்திரி மகிமைமையினை வெளிப்படுத்தும் விதமாக பக்திமயமான பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகளின் நேரலையினை எமது இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அடியார்களுக்காக நாம் வழங்கியிருந்தோம்.
குறித்த நேரலைக் காணொளியினை பார்வையிட....
No comments: