2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புத் தயாரிக்கும் பணிகள் முற்றுப் பெற்றிருப்பதாகவும், இதன்படி புதிதாக இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களின்படி 2019க்கான வாக்காளர் எண்ணிக்கை ஒருகோடி 63 இலட்சம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளை புதன்கிழமை (26) பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், 2019ஆம் ஆண்டின் புதிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் மற்றும் முக்கிய பல விடயங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதன்படி பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் காலி மாவட்டத்தில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2/25/2020 09:25:00 AM
பொதுத்தேர்தலில் மாவட்ட ரீதியான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: