News Just In

2/07/2020 03:30:00 PM

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் (தமிழில்) இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பினை அழுத்தவும் ...
Tamil Application 
விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு சான்றிதழின் புகைப்படப் பிரதி ஒன்று (மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி  

2020.02.14ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையின் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி...
தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020,
நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு,
ஜனாதிபதி அலுவலகம்,
காலி முகத்திடல்,
கொழும்பு - 01

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரியாயின் "டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

No comments: