News Just In

12/25/2019 08:47:00 AM

நத்தார் தின நல்வாழ்த்துக்கள்-ஞா.ஸ்ரீநேசன்


எளிமையாய் ,இனிமையாய்
தூய்மையாய் ,வாய்மையாய்
அருமையாய் ,பெருமையாய்
பொறுமையாய் ,கருணையாய்
உண்மையாய் ,நன்மையாய்

ஒரு மகன் பூமியில் உதித்தார்.
அவர்தான் இயேசுநாதர் ……..
அவரது பிறப்பால் மண்ணும் ,விண்ணும்
மகிமை பெற்றன .
ஊன விழிகளை ஞான விழிகளாக்கிய
உத்தமர் ஆனார்
அத்தகைய தெய்வமகனின்
உதய தினத்தை இதயத்தில்
இருத்துவோம்.
நத்தார் தினத்திற்காக
நல்வாழ்த்துக்களை விதைப்போம்

இலங்கையில் ஈரினங்களான
சிங்களர் , தமிழர்க்கு
ஒரு மதம் , ஒரு பாலமென்றால் அது
கிறிஸ்தவமாகத்தான் இருக்க
வேண்டும் .அத்தோடு உலகிலுள்ள
பல்லின மக்களை இணைத்த

ஒரு பாலம்
கிறிஸ்தவமாகும் . அத்தகைய
மதத்தைத் தந்த உத்தமர் இயேசுவைப்
போற்றித் துதிப்போம்
பொன்னாள் நன்னாள்
நத்தார் தினத்திற்காய்
நல் வாழ்த்துக்களைக் கூறுகின்றேன்.

ஞா.ஸ்ரீநேசன் ( மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் )

No comments: