News Just In

11/01/2026 06:43:00 AM

ஆமணக்கு விதைகளை உட்கொண்ட எட்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு !

ஆமணக்கு விதைகளை உட்கொண்ட எட்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் சேர்ப்பு !



திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், சூரியபுர பகுதியில் ஆமணக்கு விதைகளை உட்கொண்ட எட்டு சிறுவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று  (31) இடம்பெற்றுள்ளது

சூரியபுர பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட விதைகளை உட்கொண்ட நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று வயது சிறுவன் உட்பட எட்டு பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: