News Just In

11/05/2026 11:21:00 AM

தமிழினத்தின் பாதுகாப்பிற்கு மாற்று வழிகளே உகந்தவை தமிழரசுக் கட்சியின் கொள்கை இனத்துக்கே துரோகமிழைக்கிறது!வீ. ஆனந்தசங்கரி

தமிழினத்தின் பாதுகாப்பிற்கு மாற்று வழிகளே உகந்தவை
தமிழரசுக் கட்சியின் கொள்கை இனத்துக்கே துரோகமிழைக்கிறது





தந்தை செல்வா போன்றோரின் கொள்கைகளுக்கு மாறாக இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைமையும் செயற்பாடுகளும் உள்ளமை, தமிழினத்திற்கு செய்யும் துரோகமாக உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (04) தமிழ் அரசியலின் சமகால நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.இது தொடர்பில் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளதாவது; தற்போதைய தமிழ் அரசியல் நிலவரங்கள் மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சியின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லை.

நீண்டகாலமாக தமிழினத்தின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுத்து வருகிறேன்.சமாதானத்தை விரும்பி மக்களுடன் இணைந்து செயற்பட்டே வருகிறேன். தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா வழங்கும் ‘இந்திய மாடல்’ (Indian Model) தீர்வை அன்றைய காலகட்டத்தில் தமிழரசு கட்சி ஏற்றுக்கொள்ளாததாலேயே, பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இழக்க நேரிட்டது. தமிழ் மக்கள் மற்றும் தலைவர்கள் இனியும் தமிழரசுக் கட்சியை நம்பி ஏமாறாக்கூடாது. தமிழினத்தின் பாதுகாப்பிற்காக மாற்று அரசியல் வழிமுறைகளையும் புதிய தலைமைகளையும் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளும் கடந்த கால நிலைப்பாடுகளும் தமிழ் மக்களின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

No comments: