News Just In

10/28/2026 05:08:00 PM

நாட்டில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு - ஒரு கிழமையில் தீர்வு! வர்த்தக வாணிப பிரதியமைச்சர் உறுதி

நாட்டில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு - ஒரு கிழமையில் தீர்வு! வர்த்தக வாணிப பிரதியமைச்சர் உறுதி



நாட்டில் சமயல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் உருவாகியுள்ள நிலையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள்,

எரிவாயு கப்பலொன்று நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் மேலும் அதிலுள்ள எரிவாயுத் தொகையை இறக்குவதிலும் மூன்று நாட்களhக ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 250,000 முதல் 300,000 வரையிலான வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகவும் அந்தத் தட்டுப்பாட்டை எதிர்வரும் 7 முதல் 8 நாட்களுக்குள் முழுமையாகத் தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறுகிய காலத்தில் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த எரிவாயு கப்பல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாகவே வந்தடைந்தது. அதன் பின்னர் எரிவாயுவை இறக்குவதிலும் விநியோகப் போக்குவரத்து நடவடிக்கைகளிலும் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ஒக்டோபர் 23 ஆம் திகதி காலை முதல் தினசரி 100,000 எண்ணிக்கையிலான 12.5 கிலோகிராம் சிலிண்டர்களைத் தொடர்ச்சியாகச் சந்தைக்கு விநியோகித்து வருகின்றது.

வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீர்ந்துபோகக் கூடும் என்ற போதிலும் வீட்டுப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் சிலிண்டரொன்று பொதுவாக இரண்டரை முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments: