பொஸ்பேற் ஏற்றுமதியில் மோசடி; சாமர சம்பத் எம்.பிக்கு விளக்கமறியல்

இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கைதான இவரை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேக நபர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதராகம, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சாமர சம்பத் தசநாயக்க, ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், இரத்தினக்கல் வியாபாரிகள் மூவரிடம் இலஞ்சம் கோரியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரிடம் 12 இலட்சம் ரூபா இலஞ்சமாகக் கோரப்பட்டு, அதில் 5 இலட்சம் ரூபா பெறப்பட்டதாகவும், ஏனைய இரு வியாபாரிகளிடம் முறையே 10 இலட்சம் ரூபா மற்றும் 2 இலட்சம் ரூபா இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொஸ்பேட் (Phosphate) ஏற்றுமதியை உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்வதற்கும், அதற்கான ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொடுக்க மூன்று நிறுவனங்களிடம் இருந்து 8.1 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் நேற்று கைது செய்யப்பட்டார்.சாமர சம்பத் தசநாயக்க, இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சியும் இந்த விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

No comments: