மயிலத்தமடு – மாதவனை கால்நடை உரிமையாளர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில்: இவ் பிரச்சினைக்கு அரசு உடனடி தீர்வு வழங்க வேண்டும். மற்றும் தேசிய இன விகிதாசாரத்தை மாற்றும் குடியேற்றங்களை ஏற்க முடியாது.
விவசாயத்துறை, கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்தவிடம் நான் முன்வைத்த மேலதிக கேள்விகள்
(பாராளுமன்றம் – 04.08.2026)
நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வரும் மகாவலி விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
கிவுல் ஓயா திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் அந்தத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதுகுறித்து விரிவாக விவாதிக்க வேண்டிய தேவை ஏற்படும்.
மகாவலி அதிகார சபையின் ஊடாக இதுவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்கப்படவில்லை. ஆனால், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களுக்கு மகாவலி திட்டத்தின் மூலம் நீர் வழங்கப்பட்டுள்ளது. இது வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறையாகவே காணப்படுகிறது.
மகாவலி திட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் விதமே இன்றைய பிரதான பிரச்சினையாக உள்ளது. அமைச்சர், எந்தவொரு காணியும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். ஆனால், மணலாறு பகுதி "வெலிஓயா" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, மகாவலி அதிகார சபைத் திட்டத்தின் ஊடாக திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று அந்தக் குடியேற்றங்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, மகாவலி அதிகார சபையின் உண்மையான நோக்கம் நீர் விநியோகம் அல்ல; மாறாக தேசிய இன விகிதாசாரத்தை மாற்றும் வகையில் குடியேற்றங்களை உருவாக்குவதே என்பதே எமது அடிப்படை கவலையாகும்.
மேலும், அமைச்சர் "மயிலத்தமடு – மாதவனை" என்ற பகுதி இல்லை எனக் குறிப்பிட்டார். ஆனால், இன்று காலை மட்டுமே மயிலத்தமடு – மாதவனை பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அத்துடன், மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோத குடியேற்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, அப்பகுதியில் வாழும் கால்நடை வளர்ப்பாளர்களும் பால் பண்ணையாளர்களும் தங்களது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாதவனை பகுதியை மேய்ச்சல் தரைப் பகுதியாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிப்பதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், அமைச்சரின் பதிலில் அதற்கான எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது. அந்தப் பகுதியின் அளவீடுகள் கூட இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நுழைந்து பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற்றங்களை அமைத்து வருகின்றனர். இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் அப்பகுதி பண்ணையாளர்களுக்கும் புதிய குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடையும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து, சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுத்து, கால்நடை வளர்ப்பாளர்களின் உரிமைகளையும் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

No comments: