( ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு முன்னர் ஆரம்பிக்கும் மட்டக்களப்பு - ஆயித்தியமலை சதா சகாய அன்னை திருத்தலத்தின் பாத யாத்திரையை இம்முறை பிந்தி ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்புக் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆயித்திமலை சதா சகாய அன்னை திருத்தலத்தின் 72 வது திருவிழா எதிர்வரும் 28.08.2026 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, செப்ரெம்பெர் 06.09.2026ஆம் திகதி திருநாள் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுபெற இருக்கின்றது.
இத்திருநாள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வேளையில், மட்டக்களப்பிலிருந்து ஆயித்திய மலைக்குச் செல்லும் பாதைகளில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால், யாத்திரிகர்களின் நலன் கருதி, பாத யாத்திரையை முன்னெடுக்கவுள்ள பக்தர்கள் அதிகாலை 4:30 மணிக்கு முன்னர் தமது யாத்திரையை ஆரம்பிக்க வேண்டாம் என மாவட்வடச் செயலாளர், பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினர், ஏனைய வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் வேண்டுகோளாக முன்வைத்துள்ளனர்.
மேலும், திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, சுகாதாரம், தங்குமிட வசதிகள், குடிநீர் போன்ற விடயங்கன் தொடர்பாகவும் துறைசார் அதிகாரிகளுடன் ஆராயப்பட்டு அவற்றை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கான முடிவுகளும் எட்டப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மண்முனை மேற்கு பிரசேத செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மண்முனை மேற்கு பிரசேத சபையின் பிரதிநிதிகள், பொலிஸ் உயரதிகாரிகள், திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்
.jpeg)
.jpeg)
No comments: