News Just In

8/04/2026 11:20:00 AM

36வது சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா நிறைவு : ஹெரிடாஜ் இளைஞர் கழகம் சம்பியன்

36வது சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா நிறைவு : ஹெரிடாஜ் இளைஞர் கழகம் சம்பியன்

நூருல் ஹுதா உமர்

36வது சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா–2026 இன் இறுதிநாள் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் கல்முனை ஸாஹிறா கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆசிக் அவர்களின் வழிகாட்டுதலில், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி அவர்களின் ஒருங்கிணைப்பிலும், சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ஏ. அப்ரத் அலி அவர்களின் தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ. கங்கா சாகரிக்கா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக உதவிப் பணிப்பாளர் ஏ. முபாரக் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்சான், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.எம். சிறிவர்தன, நிர்வாக கிராம சேவை அலுவலகர் எம்.எஸ்.எம். நளீர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சி. மொஹமட், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. தல்சுரூன் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதேச மட்ட இளைஞர் கழக விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை ஹெரிடாஜ் இளைஞர் கழகம் கைப்பற்றியது.

இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன், ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் உற்சாகமான சூழலில் கோலாகலமாக நடைபெற்றது.

No comments: