News Just In

7/29/2026 09:23:00 AM

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.




நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை தோன்றியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவும் பங்கெடுத்துள்ளார்.

கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நாமல் ஓயா தலைவர் அனில் சுசந்த திடீரென எழுந்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதனை அதாவுல்லாவின் ஆதரவாளர்களும் தரப்பினரும் கடுமையாக எதிர்த்ததை அடுத்து, கூட்டத்தில் பெரும் குழப்பமும் காரசாரமான தர்க்கமும் உருவாகியுள்ளது.

இதனை அடுத்து கோபமடைந்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி,

"இங்கே யாரும் வன்முறையில் ஈடுபட முயல வேண்டாம். நாம் அனைவரும் இதனை ஒரு கண்ணியமான கூட்டமாக நடத்துவதற்கே ஒத்துழைக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.



ஆளுநரின் இந்தத் தீர்க்கமான தலையீட்டையும் எச்சரிக்கையையும் தொடர்ந்து, மண்டபத்தில் நிலவிய சலசலப்பு அடங்கி அமைதி திரும்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் ஏனைய நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்ந்தும் நடைபெற்றுள்ளன.

No comments: