News Just In

7/30/2026 03:53:00 PM

பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்!

பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானம்!



பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்குட்படுத்தி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக, பிள்ளையான் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவை 2027 ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஏப்ரல் 8, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 2006 கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன வழக்கு மற்றும் 2008 மட்டக்களப்பு கொலைகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments: