News Just In

6/28/2026 04:24:00 PM

நள்ளிரவில் ஏற்பட்ட கடும் மோதல்! அரசியல் கட்சியொன்றில் முக்கிய உறுப்பினர் கொடூரமாக கொலை

நள்ளிரவில் ஏற்பட்ட கடும் மோதல்! அரசியல் கட்சியொன்றில் முக்கிய உறுப்பினர் கொடூரமாக கொலை


அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்ட இளைஞர் அரசியல் கட்சியொன்றில் முக்கிய பதவி வகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட இளைஞர் அணியின் ஊடகச்செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று இரவு (27) மது விருந்தின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஹக்குருவெலவை சேர்ந்த 30 வயதுடைய லஹிரு சுபுன் சிந்தகா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வீரகெட்டிய பிரதேச சபையில் போட்டியிட்டுள்ளார்.

இவர் களமெட்டிய மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தில் மேலாண்மை உதவியாளராகவும் பணியாற்றி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: