நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (10) நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஹாமிது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் சட்டத்தரணியுமான றியாஸ் ஆதம் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
மாணவர்களின் விளையாட்டுத் திறன்கள், ஒழுக்கம், ஒற்றுமை உணர்வு மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு தடகள மற்றும் கள விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் நிகழ்வை மேலும் சிறப்பித்தன.
இதன்போது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் அதிதிகளினால் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிபப்ளர்கள், கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: