தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனது 84ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலையில் காலமானார்.
1977ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா 45 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் பணியாற்றினார்.
அத்துடன் கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா உள்ளிட்ட படங்கள், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
இந்தநிலையில் தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக அமைந்த பாரதிராஜாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அவரது மகன் மனோஜ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: