சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தொடர்ந்து உணவருந்தாமல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (08) அவரது குடும்ப உறவினர்களுக்கும் சட்டத்தரணிக்கும் அவரைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது தான் தொடர்ந்து உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சுரேஷ் சலே தெரிவித்துள்ளார்.
தன் மீதான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளரை நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரியே அவர் இவ்வாறு உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேக்கு அநாகரிகமாக மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சிலவற்றால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
என்ன தடைகள் ஏற்பட்டாலும் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனத் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

No comments: