News Just In

6/11/2026 01:07:00 PM

உயர்தரப் பெறுபேறுகளில் கல்முனை வலயத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த அதிபர்களுக்கு கௌரவிப்பு

உயர்தரப் பெறுபேறுகளில் கல்முனை வலயத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்த அதிபர்களுக்கு கௌரவிப்பு


நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு பங்களித்த பாடசாலை அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் அதிபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் (Commendation) வழங்கி வைக்கப்பட்டன.

கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்துவதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பாடசாலைகளின் அதிபர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டும் வகையில் இக்கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், எம்.எச். றியாசா, கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கும் பாடசாலை நிர்வாகங்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நிகழ்வில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

No comments: