மட்டக்களப்பில் நவீனமாக நிர்மாணிக்கப்பட்டு சமீபத்தில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட புதிய நூலகத்திற்கு ஏராளமான வாசகர்களும் மாணவர்களும் வருகை தருகின்றனர்.
நூலகத்திற்கு வருகை தருவோர் நவீன நூலகத்தில் உள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நவீன நூலகத்தில் அரிய வகை நூல்கள், அரிச்சுவடிகள், துறைசார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள், நவீன தொழில் நுட்பத்துடன் இணைய வசதிகொண்ட காட்சித் திரை, செயற்கை நுண்ணறிவுடன் செயற்படும் இயந்திர மனிதன், ஆக்கத்திறன்களைப் புனைதல், விளையாட்டு, கேளிக்கை, அறிவுக் களஞ்சியம், புதிர்ப் போட்டிகள், போன்ற பல சுவாரசியாமான விடயங்கள் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments: