News Just In

5/24/2026 03:28:00 PM

உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோஹாரி விழிப்புணர்வு செயலமர்வு

உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோஹாரி விழிப்புணர்வு செயலமர்வு


-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் உணர்வுகள் மற்றும் நடத்தைகளை கையாள்வதற்கான மனோஹாரி விழிப்புணர்வு புதிய மட்டக்களப்பு புதிய நவீன நூலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.

மனோஹாரி விழிப்புணர்வு செயலமர்வின் வளவாளராக மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உளவள உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்;டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் சிந்தித்து தீர்த்து வைப்பதற்கும் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமானதாக அமைந்திருந்தது.

மேலும், தனி மனித உணர்வுகளை புரிந்து கொள்வதன் மூலம் சமூக வாழ்க்கையினை மேம்படுத்துவதற்கான சுய கண்காணிப்பு உண்மைத் தன்மையை அறிதல் போன்ற பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.



No comments: