News Just In

4/17/2026 07:58:00 AM

ஜனநாயகன் முழு படத்தை திருடிய நபர் கைது.. வேறொரு படத்தின் எடிட்டர் தான்!

ஜனநாயகன் முழு படத்தை திருடிய நபர் கைது.. வேறொரு படத்தின் எடிட்டர் தான்!

விஜய்யின் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் கடந்த பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் முழு படமும் HD தரத்தில் பைரஸி தளங்களில் லீக் ஆனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமா துறைக்கே இது மிகப்பெரிய ஆபத்து என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் குரல் கொடுத்தனர். சைபர் க்ரைம் போலீசாரிடம் KVN தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்தது.

அதை தொடர்ந்து சில தினங்கள் முன்பு 6 பேரை போலீசார் கைது செய்தனர்.




இந்நிலையில் மேலும் மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். ஜனநாயகன் படத்தின் எடிட்டிங் நடந்த ஸ்டுடியோவில் நுழைந்து முழு படத்தையும் திருடிய வேறொரு படத்தின் எடிட்டரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Freelance எடிட்டர் ஆக பணியாற்றி வரும் அந்த நபர், ஸ்டுடியோவில் ஜனநாயகன் பட காட்சிகளை எடுத்து அதை கோர்த்து படமாக லீக் செய்த்து இருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மிக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

No comments: