News Just In

11/03/2025 03:55:00 PM

அநுர அரசாங்கத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி!


அநுர அரசாங்கத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி! மனம்னோந்து  அவரே கூறிய தகவல்



50 ஆண்டு கால மேல் நீதிமன்ற நீதிபதி சங்க வரலாற்றில் தலைவராக ஒரேஒரு தமிழனாக நான்தான் தெரிவு செய்யப்பட்டேன் என முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

61 வயது முடிவடைவதற்குள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். அதுதான் சட்டம். ஆனால் என்னுடைய கஷ்ட காலம் 8 நாட்களுக்குள் ஓய்வு காலம் வந்து விட்டது.

2024ஆம் ஆண்டு 50ஆவது பொன் விழாவை உயர் நீதிமன்றம் நிகழ்த்தியது. இதற்கு நானே தலைமை தாங்கினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அநுர ஆட்சியேற்றதும் எனது தலைமையில் அநுரவை சந்தித்தோம். எனது ஓய்வு காலம் குறித்து சிங்கள நீதிபதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்கள்.

மேலும் ஜனாதிபதியாக வந்தவரை முதன்முதலாக சந்தித்த நீதிபதியும் நான்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்

No comments: