- 7 சந்தேகநபர்கள் சிக்கினர்

கிரிந்த கடற்கரை பகுதியில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 6 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திஸ்ஸமஹாராம பகுதியிலுள்ள கிரிந்த, எந்தகல கடற்கரை பகுதியில் 300 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருட்களுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தென் மாகாண பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, ஐஸ் உள்ளிட்ட 300 கிலோகிராமிற்கும் அதிக போதைப்பொருட்கள் அங்கு மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
No comments: