News Just In

8/12/2021 07:43:00 AM

ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு...!!


மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் ''ஆளுக்கொரு மரம் நடுவோம் இயற்கையை பேணுவோம்'' எனும் கருப்பொருளுக்கு அமைவாக நேற்று புதன்கிழமை (11.08.2021) வாழைச்சேனை- கும்புறுமூலை அருள்மிகு முனீஸ்வரர் சிவன் ஆலயத்திலும், பேத்தாழை அருள்மிகு பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்திலும் கிடைத்தற்கரிய மரங்களான வன்னி, தேவதாரு, நாகலிங்கம், வில்வம் முதலான மரங்கள் நடுகை செய்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலாளர் திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்களும், கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் ஆனந்தகிரி அறப்பணிசபையின் ஆலோசகருமான திரு.கே.எஸ்.ஆர். சிவகுமார், இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஆனந்தகிரி அறப்பணிசபையின் இணைப்பாளருமான திரு.நே.பிருந்தாபன் மற்றும் பாலீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கபிலேஸ்வர குருக்கள் மற்றும் இருஆலயங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதற்கான மரங்களை ஆரையம்பதியை சேர்ந்த ஆர்.கிருஸ்ணபிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.

ஆனந்தகிரி அறப்பணி சபையானது இந்தியாவில் இருந்து வருகைதந்த வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டு இன, மத, மொழி பேதங்களை கடந்து மாதம் ஒரு செயற்றிட்டம் எனும் அடிப்படையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் இலவச கருத்தரங்குகள், தொழிற் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், பொருளாதார மேம்பாடு முதலான திட்டங்களையும் மையமாக கொண்டு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














No comments: