News Just In

12/24/2020 02:35:00 PM

பறவைக் காய்ச்சல் அச்சம்- கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை...!!


உலகளவில் தற்போது பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது.

அதன் காரணமாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பண்ணையில் சுமார் 1.16 மில்லியன் கோழிகள் கொல்லப்படும் என ஊடகங்கள் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், Kagawa, Fukuoka, Hyogo, Miyazaki, Hiroshima, Nara, Oita, Wakayama, Okayama, Shiga, Tokushima and Kochi ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவாமல் தடுக்க 3.4 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு பறவைகள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளன.

பிரித்தானியா, நெதர்லாந்து, வடக்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் பறவைக் காய்ச்சல் பரவியது சமீபத்தில் கண்டறியப்பட்டது.

No comments: