News Just In

12/24/2020 08:05:00 AM

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மடிக்கணினி வழங்கி வைப்பு..!!


ஸ்மார்ட் கிளாசஸ்" திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 150 பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் இன்று முதற்கட்டமாக 16 பாடசாலைகளுக்கான மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

கடந்த வருடம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக, பாடசாலைகள் இயங்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக முன்னெடுப்பதற்கு, பாடசாலைகளுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் காணி, உட்பட வலயக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

No comments: