News Just In

11/03/2020 07:17:00 AM

கிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம்- மக்களுக்கு எச்சரிக்கை...!!


கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை நேற்று(2) கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் பணியாற்றும் ஒருவருக்கே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் பணியாற்றும் உணவகத்தின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது

இந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, நாட்டின் 24 மாவட்டங்களுக்கு பரவியிருந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையிலேயே, கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: