News Just In

10/27/2026 07:23:00 AM

வங்காள விரிகுடாவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்ற அர்னாப்! இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் அதிதீவிர புயலாக வலுப்பெற்ற அர்னாப்! இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை



மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய “அர்னாப்” (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து 'மிகத் தீவிர புயலாக' மாற்றமடைந்துள்ளது.

இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° க்கு அருகில், அதாவது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கி.மீ வடகிழக்கு திசையில் இந்த தீவிர புயலாக மையக்கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று பி.ப. 05.30 மணி வரை மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதுடன், அதன்பின்னர் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கடற்கரையினூடாக இந்தியக் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (27) மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.

புயலின் நேரடி தாக்கம் இலங்கைக்கு இல்லை என்றபோதிலும், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: