News Just In

2/20/2026 05:51:00 PM

அதிகரிக்கவுள்ள மின்சார கட்டணம் - வெளியான தகவல்

அதிகரிக்கவுள்ள மின்சார கட்டணம் - வெளியான தகவல்



புதிய வலுசக்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின்நிலையத்திற்காகத் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் மக்களே சுமக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலக்கரி மோசடிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அத்துல குறிப்பிட்டுள்ளார்.

No comments: