News Just In

12/09/2025 07:08:00 PM

..ஓட்டமாவடிசுகாதார வைத்தியஅதிகாரிப் பிரிவில்14 பேருக்கு சிவப்புஎச்சரிக்கை அறிவித்தல்3 பேருக்கெதிராக வழக்குத்தாக்கல்


.ஓட்டமாவடிசுகாதார வைத்தியஅதிகாரிப் பிரிவில்14 பேருக்கு சிவப்புஎச்சரிக்கை அறிவித்தல்3 பேருக்கெதிராக வழக்குத்தாக்கல்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு பரவக் கூடிய நிலையில் சூழலை வைத்திருந்தவர்கள் 14 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் கையளிக்கப்பட்டதாகவும் 3 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

“டெங்கு கட்டுப்பாடும் களப் பரிசோதனையும்” என்ற தேசிய நிகழ்வுகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வுகளுக்குப் பொலிஸாரும், சுகாதாரக் குழுக்களும், சமூக சேவை அமைப்புக்களும், புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஆயர்வேத வைத்தியர்களும் உதவி ஒத்தாசைகளை வழங்கி வருவதாக சுகாதார வைத்திய அதிகாரி தாரிக் மேலும் தெரிவித்தார்.

சிலோன் ஓப்பன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எம்.யூ.எப். ருஷ்னாவின் ஒருங்கிணைப்பில் திங்களன்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு களப் பரிசோதனை நிகழ்வில் அந்நிறுவனத்தின் தாதிய கற்கை மாணவர்களும் அதன் மற்றுமுள்ள அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

“டெங்கு கட்டுப்பாடும் களப் பரிசோதனையும்” என்ற தேசிய நிகழ்வுகளுக்கான சுகாதார வாரம் டிசெம்பெர் 8ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வேளையில் டெங்கு பரவக்கூடிய சாத்தியப்பாடுள்ள சூழலை அகற்றுதல், சூழலை அசுத்தமாகப் பாவிப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், எச்சரிக்கை அறிவித்தல்களை வழங்குதல், விழிப்புணர்வூட்டல், கிரமமாக திண்மக் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்று வருகின்றன

No comments: