ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பிரதமர் ஆதரவு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் பயணம் மேற்கொண்டு வரும் டொனால்டு ட்ரம்ப், மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட அவர் மத்தியஸ்தம் செய்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: