News Just In

10/28/2025 05:22:00 PM

மிரட்டும் ‘மோந்தா’ புயல்: ஆந்திரா, ஒடிசாவில் ரெட் அலர்ட் - ரயில்கள், விமானங்கள் ரத்து

மிரட்டும் ‘மோந்தா’ புயல்: ஆந்திரா, ஒடிசாவில் ரெட் அலர்ட் - ரயில்கள், விமானங்கள் ரத்து



 வங்கக் கடலில் தீவிரமாக உருவான 'மோந்தா' புயல் இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒடிசா மற்றும் ஆந்திர மாவட்டங்களுக்கு சிகப்புஅலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ரயில்களும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒடிசாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: மோந்தா புயல் காரணமாக சிகப்பு  அலர்ட் விடுக்கப்பட்ட தெற்கு ஒடிசாவை சேர்ந்த மல்கன்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரங்பூர், கலஹந்தி மற்றும் காந்தமால் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலைப்பாங்கான பகுதிகளிலிருந்து மக்களை அரசு வெளியேற்றியுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு சேவையின் 140 மீட்புக் குழுக்களை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஒடிசாவின் நவரங்பூர், கலஹந்தி, காந்த்மால், நயாகர், கோர்தா மற்றும் பூரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல அங்குல், தேன்கனல், கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபாடா, ஜாஜ்பூர், கியோஞ்சர், பத்ரக், பாலாசோர், மயூர்பஞ்ச், சம்பல்பூர், தியோகர், ஜார்சுகுடா, போலாங், புலோராங், பர்கர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 30-ம் தேதி வரை ஒடிசாவில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளனர்.

No comments: