
இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள், உள்ளிட்ட அவரது மனைவியின் தாயார் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மதுகம ஷானின் நெருங்கிய நண்பர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கமைய பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரையில், செவ்வந்தியிடமும் அவருடன் கைதான பலரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments: