News Just In

10/15/2025 08:49:00 AM

நாடுகடத்த உதவிய தமிழருக்கு ஒன்றரை கோடி..! புலனாய்வாளர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

நாடுகடத்த உதவிய தமிழருக்கு ஒன்றரை கோடி..! புலனாய்வாளர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி


கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இதுவரை காலமும் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருடன் கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் புலனாய்வில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் படுகொலை செய்ய உதவிய இஷாரா செவ்வந்தியை நாடுகடத்த கிட்டத்தட்ட 1 1/2 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, யாழில் இருந்து இந்தியா அங்கிருந்து நேபாளம் என இஷாரா செவ்வந்தியை நாடுகடத்திய ஜே.கே.பாய் என்ற நபருக்கு இந்த பணத்தினை கெஹல் பத்ர பத்மே வழங்கியுள்ளார்.

கெஹல் பத்ர பத்மே, பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ, தனது தந்தையை கொலை செய்தததையடுத்து அவரை பழிவாங்கும் நோக்கில் இந்த பாரிய திட்டத்தை வகுத்துள்ளார்.

அதன்படி, புதுக்கடை நீதவான் நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டதையடுத்து இச்சம்பவத்திற்கு உதவிய இஷாரா செவ்வந்தியை காப்பாற்றுவதற்காக கெஹல் பத்ர கோடி கணக்கில் பணம் செலவிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதில் தொடர்புடைய மற்றையவர்கள் மற்றும் இஷாராவை பாதுகாப்பாக நாடுகடத்த உதவிய தமிழரான ஜே.கே.பாய்க்கும் கெஹல் பத்ர அதிகளவிலான பணம் செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: