News Just In

10/08/2025 05:46:00 AM

2009 இறுதி நிமிடங்களை தீர்மானித்த கோட்டாபய - சதீஷ் நம்பியார் - உடைக்கப்படும் மர்ம முடிச்சுகள்!


2009 இறுதி நிமிடங்களை தீர்மானித்த கோட்டாபய - சதீஷ் நம்பியார் - உடைக்கப்படும் மர்ம முடிச்சுகள்!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, போரின் இறுதித் தருவாயில் போர்நிறுத்ததை அறிவித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

எனவே, இலங்கை சட்டத்தின் அதியுச்ச தண்டனையான மரண தண்டனையை மகிந்தவுக்கு வழங்க வேண்டும் என சரத் பொன்சேகா கூறியிருந்தார்.

இவ்வாறிருக்க, போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கோட்டாபய ராஜபக்சவே போரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தார்.

எனவே, போரை நடத்தியது, கோட்டாபய ராஜபக்சவே அன்றி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவோ அல்லது மகிந்த ராஜபக்சவோ அல்ல.

அன்றைய காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலாளராக விஜய் நம்பியார் இருந்தார். ஆனால், போர்நிறுத்தத்திற்காக அவரின் சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றார்.

போரின் இறுதித் தருவாயில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில், மைத்திரிபால சிறிசேன முப்படைகளின் தளபதியாக செயற்பட்டார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச, சதீஷ் நம்பியார் மற்றும் விஜய் நம்பியார் உள்ளிட்டோரே போரின் இறுதி நிமிடங்கள் மற்றும் படுகொலைகளை தீர்மானித்தனர்

No comments: