News Just In

9/24/2025 07:11:00 PM

இயக்கச்சி Reecha பண்ணையில் பாரிய தீவிபத்து; நடந்தது என்ன?

இயக்கச்சி Reecha பண்ணையில் பாரிய தீவிபத்து; நடந்தது என்ன?



கிளிநொச்சி இயக்கசியில் அமைந்துள்ள Reecha organic farm கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு சில விசமிகளால் காழ்ப்புணர்ச்சியில் பதிவுகள் வெளியாகி இருந்தது.

அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்றைய தினம் Reecha organic farm அருகே உள்ளவரின் காணியில் குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ Reecha இலும் பரவி 250 இற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகியுள்ளதாக அதன் நிறுவுனர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் Reecha தொழிலாளர்கள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன், காணொளியையும் பகிர்ந்துள்ளார்.

பலரின் உழைப்பால் உருவாக்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் தீயில் கருகியுள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: