News Just In

9/26/2025 09:56:00 AM

நாட்டில் சிறுவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு!


நாட்டில் சிறுவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு!




நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதகாலப் பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஜுலை மாதம் வரை அவ்வாறான சித்திரவதைகள் தொடர்பில் 1126 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

வீடுகள், பாடசாலை, தடுப்பு நிலையங்கள் மற்றும் வீதிகளில் வைத்தே கூடுதலான சிறுவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதே போன்று கடந்த ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பில் சுமார் 1350 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: