News Just In

9/19/2025 04:08:00 PM

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!




பொருட்களை வாங்கும் போதும், பணத்தை கையாளும் போது போலி நாணயதாள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்துகிறது.

போலி நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் அல்லது கையாளுபவர்கள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனடியாக இலங்கை பொலிஸாருக்கு தெரிவிக்கவும் என்றும் பொலிஸ் அறிவுறுத்துகிறது.

இதற்கிடையில், ஹபரானா நகரில், தலா இரண்டு போலி ரூ. 5000 தாள்களை வைத்திருந்த மேலும் இரண்டு பேர் வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் போது, ​​போலி ரூ. 5000 நாணயத்தாள்களை அச்சிட்ட ஒரு சந்தேக நபரும், அத்தகைய 138 நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: