News Just In

9/17/2025 07:42:00 AM

கொழும்பை கதி கலங்க வைத்த தமிழ் சட்டத்தரணி.. கலக்கத்தில் கோட்டாபயவின் கும்பல்

கொழும்பை கதி கலங்க வைத்த தமிழ் சட்டத்தரணி.. கலக்கத்தில் கோட்டாபயவின் கும்பல்



11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தொடர்புற்றிருப்பது தொடர்பான வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்துறை குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்மறை கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும் சட்டம் தன் கடமைகளை நிறைவேற்றியுள்ளமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன எனலாம்.

அந்தவகையில், பல வழக்குகளுக்கு மும்முரமாக இருந்து செயற்பட்டு நீதியை நிலைநாட்டவும் பாடுபட்ட பல தமிழ் சட்டத்தரணிகளும் உள்ளனர்.

எனவே, சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா மேற்கொண்ட முதற்கட்ட நடவடிக்கையினால் தான் இந்த கடத்தல் வழக்கு இவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் மிகையாகாது.

No comments: