News Just In

9/23/2025 01:02:00 PM

ஜனாதிபதியை படுகொலை செய்யும் திட்டம்.. முகமூடி அணிந்த கொலையாளியின் இரகசிய நகர்வு

ஜனாதிபதியை படுகொலை செய்யும் திட்டம்.. முகமூடி அணிந்த கொலையாளியின் இரகசிய நகர்வு!


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கான அமைப்பை சேர்ந்த அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தை முகமூடி அணிந்த கொலையாளி ஒருவரை வைத்து செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தத் திட்டம் காரணமாக ஜனாதிபதிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளதாகவும், அதை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments: