வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய அரசு – இளம் தலைமுறை வீதியில்! மற்றும் வாக்குகளை பெறுவதற்காக NPP அரசால் நிரந்தர நியமனம் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட ஊழியர்கள்..!
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் 12.09.2025. இவ் அரசு வேலை இல்லா பட்டதாரிகள் மற்றும் நிரந்திரம் அல்லாத அரச ஊழியர்களை சென்ற தேர்தலில் வாக்குகளுக்காக பயன்படுத்தியதை போன்று இம்முறையும் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு இவர்களின் வாக்குகளை திரும்பவும் ஏமாற்றி பெற முனையாமல் இவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுள்ளர்கள்.
மாண்புமிகு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்களிடம் கேட்பதற்கு. தேசிய மக்கள் அதிகாரத்தின் (NPP) தேர்தல் அறிக்கையான “மகிழ்ச்சியான தேசம் – அழகான வாழ்க்கை” (A Thriving Nation – Beautiful Life) இல், “நிலையான பொருளாதாரம்” என்ற தலைப்பின் கீழ், 7ஆம் பக்கத்தில், பட்டதாரிகளுக்கு 35,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், பட்டதாரிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனடிப்படையில், நான் மாண்புமிகு அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை முன்வைத்தேன்: தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 35,000 பட்டதாரி வேலைவாய்ப்புகளில் இதுவரை எத்தனை வழங்கப்பட்டுள்ளன? வழங்கப்படவில்லை எனில், அதற்கான காரணங்கள் என்ன?
ஒன்பது மாகாண சபைகளின் கீழ் உள்ள பல்வேறு மாகாண அமைச்சுகளில் தற்போது எத்தனை காலிப் பணியிடங்கள் (Vacant Cadres) உள்ளன?
மாகாண சபைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்ளும் வகையில், மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படவுள்ளன? என்பது தொடர்பாகவும் பாராளுமன்ற அமர்வில் எனது கேள்விகள் காணப்பட்டது.
9/12/2025 01:34:00 PM
வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய அரசு!இரா சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: