News Just In

9/27/2025 08:54:00 AM

பாணில் மனித காயத் தோலின் ஒரு பகுதி

பாணில்_மனித_காயத் தோலின்_ஒரு_பகுதி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு




ஹட்டன் பிரதேச ஒரு பேக்கரியில் தயாரிக்கப்பட்ட பாணில் மனித காயத் தோலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உணவிற்காக பாண் வாங்கிய வாடிக்கையாளர், அதை உண்ண முயன்றபோது, ஒரு துண்டில் விரல் காயத் தோல் இருப்பதை கண்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் பாணையும், அந்த காயத் தோல் துண்டையும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த பேக்கரி உரிமையாளர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, முன்னர் பலமுறை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

No comments: