News Just In

9/24/2025 07:03:00 PM

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணி தேசிய மட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை


நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி அணி தேசிய மட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை




நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கபடி போட்டி செப்டம்பர் 20,21,22,23 ஆம் திகதிகளில் நிந்தவூர் MAC உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் கமு/கமு/அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் 20 வயது ஆண்கள் பிரிவு கபடி அணியினர் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய கபடி அணியினரை எதிர்த்தாடி 56 :24 புள்ளி பெற்று கிழக்கு மாகாணம் சார்பாக அகில இலங்கை கபடிப் போட்டியில் முதல் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்

மேலும் இப்போட்டியில் 2025 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயது ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராக அப் பாடசாலையின் 20 வயது ஆண்கள் பிரிவு கபடி அணி தலைவர் ஏ.அப்துல் ஹாதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான ஆலோசனை வழிகாட்டல் வழங்கி வழிப்படுத்திய கல்லூரி முதல்வர் ஏ.அப்துல் கபூர், பிரதி மற்றும் உதவி அதிபர்கள், இவ் வெற்றிக்கு காரணமாக இருந்து மாணவர்களை வழிகாட்டிய கபடிப் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அஸ்மி, பிரதம கபடி பயிற்றுவிப்பாளர்களாக செயல்படும் உடற்கல்வி ஆசிரியரும் தேசிய கபடி பயிற்றுவிப்பாளரும் கபடி நடுவருமான எஸ்.எம். இஸ்மத் சர்வதேச கபடி வீரரும் கபடி பயிற்றுவிப்பாளருமான எம்.ரீ.அஸ்லம் ஸஜா, முன்னாள் கபடி அணி வீரர் கே.எம். நப்ரீஸ், பாடசாலையின் ஏனைய முன்னாள் கபடி வீரர்கள் சகல வழிகளிலும் ஒத்தாசை வழங்கிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எம்.எம். ஹாஸீக், பாடசாலை கபடி பொறுப்பாசிரியர் ஏ. ஹலீம் அஹமட் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்பு மற்றும் 2002 பழைய மாணவர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கும் அஷ்ரக்கியன் சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளது

No comments: