News Just In

9/17/2025 08:14:00 PM

ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடாத்திய உதைபந்தாட்ட போட்டி : சம்பியனாக குளனி கோல்ட் ஸ்டார் அணி.

ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடாத்திய உதைபந்தாட்ட போட்டி : சம்பியனாக குளனி கோல்ட் ஸ்டார் அணி.


நூருல் ஹுதா உமர்

நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடத்திய மர்ஹும் சாகுல் ஹமீது நிஸாபீர் மற்றும் மர்ஹும் றியால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை(12) நற்பிட்டிமுனை அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் 4ம்,5ம் குளனி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து நற்பிட்டிமுனை ரோயல் விளையாட்டுக் கழகம் மோதின. தண்டனை உதையின் மூலம் 4ம்,5ம் குளனி கோல்ட் ஸ்டார் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டார். மேலும் இப் போட்டியில் சிறப்பு அதிதிகளாக எம்.எச்.கே நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.மாஜீத், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் வை.ஏ.கே.தாஸிம், நற்பிட்டிமுனை ஹிமாஸ் மல்டி சென்டர் உரிமையாளர் எஸ்.எம் லத்தீப், எம்.நியாஸ் மற்றும் கல்முனை லீடர் அஸ்ரப் பெடரேசன் தவிசாளர் ஏ.எல் சறூக் உட்பட ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: