News Just In

9/13/2025 02:25:00 PM

முதல் பிரசார பரப்புரையை ஆரம்பித்த விஜய்


முதல் பிரசார பரப்புரையை ஆரம்பித்த விஜய்


தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியில் ஆரம்பித்துள்ளார்.

‘உங்க விஜய் நா வரேன்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணம், மாநிலம் முழுவதும் இன்று 13ஆம் திகதி முதல் டிசம்பர் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வந்தடைந்த விஜயை, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த பிரசாரம் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ஆதரவாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments: