முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமானது சாணக்கியனின் 5 வருடகால தொடர்ச்சியான தலையீட்டினால் விடுவிப்பு.
2020ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான காலப்பகுதியிலிருந்து குறிப்பாக வடக்குக் கிழக்கிலே உள்ள இராணுவ முகாம்கள் மக்களது காணிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது தொடர்ச்சியாக கூறப்பட்ட ஒரு விடயம். இது சம்பந்தமாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலே இவற்றை விடுவிக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் இக்காலத்தில் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் போன்றவர்கள் “தாங்கள் முன்னின்று அவற்றை அகற்ற வேண்டும். பாதுகாப்பு அமைச்சு கூட்டத்திலே சாணக்கியன் கூறியதற்கு அமைவாக இவற்றை செய்யக் கூடாது” எனக் கூறினார்கள். இதனால் இராணவ முகாம்கள் அகற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பிற்பாடு பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்திலே இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு முடிவு எட்டப்பட்டது. பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டன. இருந்த போதிலும் பாடசாலைகளுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை. 2024ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் இரண்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டங்களிலே இவ்விடயம் முன்வைக்கப்பட்டது. இறுதியாக நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் காணிகளை விடுபிப்பதாக ஜனாதிபதி அவர்கள் கூறியிருந்தார். இது அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தினுடைய கூட்டக் குறிப்பிலே சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலாக இது முன்வைக்கப்பட்டது. இராணுவ முகாமானது அகற்றப்பட்டிருக்கின்றது. மேலும் மக்களது காணிகளிலே விடிவிக்கப்படாதுள்ள இராணுவ முகாம்களை மிக விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments: