News Just In

9/24/2025 08:21:00 PM

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை


மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை




மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது.

Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது.

முதல் 10 இடங்களில், ஓமன் மட்டுமே ஐரோப்பிய நாடு இல்லாத நாடு ஆகும்.

இந்த பட்டியலில், 124.4 புள்ளிகளுடன் இந்தியா 62வது இடத்தில் உள்ளது.

உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா முன்னேறி இருந்தாலும், அதிக அளவிலான மாசுபாடு, மக்கள் தொகை அடர்த்தி, சுகாதாரப் பராமரிப்பில் சீரற்ற அணுகல், கடுமையான நகர்ப்புற கிராமப்புற வேறுபாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கின்றன.

105.7 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 76வது இடத்தில் உள்ளது.
4வது இடத்தில் இலங்கை

மோசமான வாழ்க்கை தரமுள்ள நாடுகளின் பட்டியலில், 15.6 புள்ளிகளுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது.



வெனிசுலா 2வது இடத்திலும், வங்கதேசம் 3வது இடத்திலும் உள்ளது.

இதில், 82.8 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்தை பிடித்துள்ளது.

சமீபத்திய பொருளாதார மீட்சி, நிலையான வாழ்க்கை தரம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் வாழ்க்கை தரம் வடிவமைக்கபட்டுள்ளது. அதேவேளையில், அதிக கடன், பண வீக்கம் ஆகியவை மக்களின் வாழ்க்கைதரம் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை பாதிக்கின்றன.

எகிப்து 5வது இடத்திலும், ஈரான் 6வது இடத்திலும், பெரு 7வது இடத்திலும், கென்யா 8வது இடத்திலும், வியட்நாம் 9வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 10வது இடத்திலும் உள்ளது.

No comments: