News Just In

9/27/2025 12:08:00 PM

திலிபனின் 38 வது நினைவு; வாகரையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

திலிபனின் 38 வது நினைவு; வாகரையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு



தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந் நிகழ்வு இலக்கியா தென்றல் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.நிதர்சன் தலைமையிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி மௌன இறைவணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட யுத்த காலத்தில் உயிர் நீர்த்த மாவீரர்களின் தாய்மார்கள்,வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் ஆகியோர்கள் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்கள் .

அதனைத் தொடர்ந்து இலக்கியா தென்றல் அமைப்பின் அனுசரணையுடன் வாகரை பிரதேசத்தில் 38ஆம் ஆண்டு நினைவு எழுச்சி நாளாக இளைஞர்களுக்கு,

கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் பிரதேச மட்ட அணிகளுக்கு இடம்பெற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments: