News Just In

3/05/2025 02:24:00 PM

ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருக்கமான உறவு பெண் கைது!

ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருக்கமான உறவு பெண் கைது




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினரான டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (05) குற்றப் புலனாய்வுத் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெய்சி பொரெஸ்ட் என்ற பெண்மணி ராஜபக்சர்களின் பினாமியாக செயற்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: