சுனாமி 20 ஆண்டுகள் நினைவு நிகழ்வுகள் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இடம்பெற்றன.மட்டக்களப்பு கல்லடி டச்பார், திருச்செந்தூர், நாவலடி புதுமுகத்துவாரம் ஆகிய பகுதிகளில் அதிக உறவுகள் காவு கொள்ளப்பட்டிருந்தனர், அதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபிகளில் சமய வழிபாடுகள் இடம்பெற்றன.
உயிரிழந்த உறவினர்களின் உறவுகளால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் நினைவாக தாகசாந்தியும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் சர்வ மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
No comments: